செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (10:59 IST)

மழை மீட்புப்பணி: களத்தில் இறங்கிய காவல்துறையினர்

சென்னையில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு காண தமிழக அரசு அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி மீட்புப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



 


சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். காவல்துறையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போக்குவரத்தை ஒழுங்கு செய்துவிட்டு இன்று அதிகாலை தான் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பி தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இயல்பு நிலை திரும்பும் வரை காவல்துறை அதிகாரிகள் அனைத்து பணிகளிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன்னர் பேட்டியளித்தார்.

காவல்துறையினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.