வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (19:10 IST)

5 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி, துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி தொகுதி, கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை தொகுதி ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த ஐந்து தொகுதிகள் உள்பட ஒரு சில தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்படும் என்று தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ’நாளை 234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார்
 
ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என பரவிவரும் தகுதியை தகவலில் உண்மை இல்லை என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை திட்டமிட்டபடி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது