வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:52 IST)

முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படம் வைரல்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான  கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  தனது சிறு வயது தோழியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இன்று ஏப்ரல் 5 ஆம் தேதி நடிகை கல்யாணி பிரியதர்சன் தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது தோழியான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து,  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு…..ஏராளமான அன்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்துடன் உனது பிறந்தநாள் இருக்கட்டும்…இவ்வாண்டு உனக்கு சிறந்த ஆண்டாக இருக்கட்டும் என குறீப்பிட்டு, அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதுவைரலாகிவருகிறது.