ஸ்டாலின் தொகுதியில் 60%, எடப்பாடியார் தொகுதியில் 85% - கலகலக்கும் வாக்குப்பதிவு வீதம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.