1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (11:42 IST)

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவு..!

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 
 
இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின  என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.