அதை விஜய்யிடம் தான் கேட்கவேண்டும்… விஜய் சேதுபதி நச் பதில்!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (08:31 IST)

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு சூடான பதிலை அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் பல சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இதில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க பெட்ரோல் விலையுயர்வு குறித்து சாடுவதற்காகவே அவர் அவ்வாறு செய்ததாக சொல்லப்பட்டது. இதுபற்றி மற்றொரு நடிகரான விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்… அவரிடம்தானே கேட்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :