மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேர்தல் அலுவலர் மாற்றம்! - காரணம் என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு பதிலாக புதிய அலுவலராக கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலருக்கு திடீர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.