புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (17:15 IST)

பள்ளி கல்வித்துறை நடத்தும் பொதுத்தேர்வு அட்டவணையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!

செய்முறை தேர்வு பிப்ரவரியில் ஆரம்பிக்கும் நிலையில், மார்ச் ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 10, 11, 12 - ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும் முடிவுகள் விவரங்கள் வெளியிடப்பட்டன.
 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அட்டவணையை வெளியிட்டார். அதன் அடிப்படையில், 2024 - 25 கல்வியாண்டு 10,11,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து, எழுத்து தேர்வு மார்ச் ஏப்ரல் மாதங்களில் முடிந்து, மே மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. எழுத்து தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.பதினோராம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. எழுத்து தேர்வு மார்ச் 5 தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 7 தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. எழுத்து தேர்வு மார்ச் மாதம் 3 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மே 9 தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
 
கற்றல் திறன் குறைவாக உள்ள மாணாக்கர்களுக்கு சிறப்பு கவனிப்புடன் வகுப்புகள் நடத்தப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என தெரிவித்து இருக்கின்ற அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் கல்வி தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதுமான நிதி உதவி வந்து வருவதாக தெரிவித்து இருக்கின்றார் .
 
பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதவும், தேர்வில் சிறந்து விளங்க அறிவுறுத்தி இருக்கின்றார்.