புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2017 (17:05 IST)

இறப்புக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி: உளறிய அமைச்சர்!

இறப்புக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி: உளறிய அமைச்சர்!

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு எச்.ராஜாபை தொலைப்பேசியில் எச்.ராஜாவை தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உளறியுள்ளார்.


 
 
எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் பேராசிரியராக இருந்தவர். அவர் நேற்று காலமானதையடுத்து திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
 
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எச்.ராஜாவின் தந்தை மரணத்துக்கு நேரில் சென்று இரங்கலை தெரிவித்தார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், எச்.ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையிலும், அவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாங்கள் இங்கு நேரடியாக வருகை தந்திருக்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்.ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கலும் வாழ்த்தும் தெரிவித்தார் என வாய் தவறி தவறுதலாக கூறினார்.
 
இதே போல நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைந்த போது நடிகர் விஜகாந்த், விஜயகுமாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.