செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2017 (09:11 IST)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டதால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களில் முதன்மையான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.