பிரதமர் பதவிக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி - தம்பிதுரை எம்.பி.,
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று அதிமுக மா நிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை புரிந்த நிலையில் அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் அமித்ஷாவை, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பிரதமர்களை நாம் தவற விட்டுள்ளோம் என்றும், ஆனால் வரும் காலங்களில் ஒரு தமிழரை கண்டிப்பாக பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று பாஜக நிர்வாகி கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அதிமுக மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை இதுபற்றி கருத்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். அதற்கு தகுதியானவர் இபிஎஸ் தான் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.