1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (16:51 IST)

தலைவர் என்கிற பொறுப்புக்கு தகுதியற்றவர் அண்ணாமலை - ஜெயக்குமார்

‘’தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டின்போது, மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின்  மீது வன்மத்தைக் கக்கியுள்ள  அண்ணாமலையின் செயல்  வன்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்  கூறியுள்ளதாவது:

உலகம் முழுவதும் உள்ளள 10 கோடிக்கும் மேலுள்ள  நெஞ்சங்களில் நீக்கமற  நிறைந்திருக்கும் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள். உலகம் முழுவதும் போற்றக்கூடிய தலைவர்.  எல்லா சாலைகளும் போயஸ் கார்டன்  நோக்கி என்ற வகையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர்கள் , பாஜக தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். அவர் மிகப்பெரிய தலைவர், அவரது புகழ் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

3 வருட  காலத்தில் கத்துக்குட்டியான அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது. பாரம்பரியமும் தெரியாது. தன்னை முன்னிலைபடுத்த வேண்டி, அதிமுகவின் மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார். தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டின்போது, அம்மாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் கொதித்துப் போயுள்ளார்கள்.
Annamalai

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. தலைவர் என்கிற பொறுப்புக்கு தகுதியற்றவர் அண்ணாமலை.  பாஜக – அதிமுக கூட்டணி தொடரக்கூடாது. மோதி பிரதமராகக் வரக்கூடாது என்ற அடிப்படையில்தான் அண்ணாமலை செயல்பாடு உள்ளது.

பாஜக தேசிய தலைவர் நட்டாவும், அமைச்சர் அமித் ஷாவும் கூட்டணி தர்மத்தை மீறியுள்ள அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும். மாநில தலைவருக்கான தகுதியே அண்ணாமலையில் இல்லை ’’ என்று தெரிவித்துள்ளார்.