வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (10:57 IST)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்.. பெண் நீதிபதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதியாகியுள்ள ஸ்ரீபதிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் பாராட்டி உள்ளனர்.
 
 நீதிபதி தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஸ்ரீபதி குழந்தை பெற்ற நிலையில் தனது விடா முயற்சியால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகி உள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருக்குறளை மையமாக காட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் கூறி இருப்பதாவது
 
திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன திருமதி.ஸ்ரீபதி அவர்கள் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று முதல்  பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்வாகி இருப்பதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,
 
 “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகளைச் சான்றோள் எனக்கேட்ட தாய்" 
என்று வள்ளுவரே மாற்றி எழுதும் வண்ணம் பின்தங்கிய நிலையில் இருந்து இத்தகைய
 செயற்கரிய சாதனை புரிந்திருக்கும் மாணவி ஸ்ரீபதி மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கிறேன்.
 
Edited by Mahendran