வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (17:31 IST)

நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண் ஸ்ரீபதியை பாராட்டிய முதல்வர்

ஜவ்வாது மலையில் இருந்து பழங்குடிப் பெண் ஒருவர் தமிழ் நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 
தமிழ் நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் நடத்திய சிவில்    நீதிபதிக்கான போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்குடியின ஸ்ரீபதி(23) தேர்ச்சி  பெற்றுள்ளார்.
 
இவர் 6 மாதப் பயிற்சிக்கு பின்னர் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், இவர் சென்னைக்கு வந்து  தேர்வு எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.
 
ஸ்ரீமதிக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்,  முதல்வர் மு.க. ஸ்டாலின் ''திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
 
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
 
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
 
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
 
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!”'என்று தெரிவித்துள்ளது,

அதேபோல் நீலம் பண்பாட்டு மையம் ஸ்ரீமதியைப் பாராட்டியுள்ளது.
 
இதுகுறித்து, நிலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாவது:

பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி!
 
நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஜவ்வாதுமலை பகுதி பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் சகோதரி_ஸ்ரீபதி (Civil Judge) அவர்களுக்கு  நீலம்பண்பாட்டுமையம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.கல்வியே நம் ஆயுதம்!''என்று தெரிவித்துள்ளது.