ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:50 IST)

நீதித்துறையில் பல சாதனைகள் செய்க: பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதிக்கு தமிழிசை வாழ்த்து..!

தமிழ் நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் நடத்திய சிவில்    நீதிபதிக்கான போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்குடியின ஸ்ரீபதி  தேர்ச்சி  பெற்று 6 மாதப் பயிற்சிக்கு பின்னர் நீதிபதி ஆகியுள்ளார். 
 
இந்த நிலையில் ஸ்ரீமதிக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பல பலரும் பாராட்டியுள்ள நிலையில் புதுவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளதாவது:
 
உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரி திருமதி. ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
சாமானிய பெண்களும் தனது திறமையால் சாதிக்க முடியும் என நிரூபித்த நீதிபதி ஸ்ரீபதி அவர்களின் பணிகள் சிறக்கவும், நீதித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....
 
Edited by Mahendran