திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (16:22 IST)

நிதியமைச்சர் மரபை மீறி செயல்படுகிறார்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

நிதி அமைச்சர் மரபை மீறி செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்
 
சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்தில் கொண்டிருக்கும்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையை விட்டு திடீரென வெளியேறினார் 
 
இதனை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நிதி அமைச்சர் அவையில் இருக்க வேண்டுமென்றும் நிதியமைச்சர் மரபை மீறி செயல்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். ஆனால் நிதியமைச்சர் அலுவல் காரணமாகத்தான் அவையைவிட்டு வெளியேறினார் என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்