ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் என்றும் திமுக வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள், ஆனால் மத்திய அரசிடம் இதுவரை குரல் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதிமுக குறித்து விமர்சனம் செய்ய திமுகவுக்கு அருகதை இல்லை என்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சொத்துவரி விலைவாசி உயர்வு போதைப் பொருள் நடமாட்டம் மின்சார கட்டண உயர்வு ஆகியோரை குறித்து குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றது என்றும் இந்த தேர்தலில் எந்த அளவு மிதிவீரர்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஊடகம் பத்திரிகைகள் நண்பர்கள் மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva