புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (11:26 IST)

கஞ்சா கடத்தல்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது..! – வெளிநடப்பு செய்த எடப்பாடியார் கண்டனம்!

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் புதிய வருடம் தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பமாக கவர்னர் உரை வாசிக்கப்பட்டது. அப்போது கவர்னர் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுகின்றன. திமுக அரசு சரியாக செயல்படாததால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.