1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (12:29 IST)

அதிமுகவுக்கு பெரிய கும்பிடு; ஏன் திமுக? ஈபிஎஸ் அண்ணன் பேட்டி!!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக முதல்வராகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன் நேற்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
 
எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்து வந்தவர் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் சகோதரரே இப்படி திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதவடது, அதிமுகவில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லாம் நடக்க வேண்டும். மக்கள் விரோத போக்கு அக்கட்சியில் ரொம்ப அதிகமாக உள்ளது. 
 
அங்கு சுதந்திரமாக எதிலும் செயல்பட முடியவில்லை. சுதந்திரமாக செயல்பட கூடிய ஒரே கட்சி திமுகதான். மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டால் திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.