1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (19:56 IST)

முதல்வர், துணை முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தற்போது ஆளுநரை சந்தித்துள்ளனர்.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவது போராட்டம் நடக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் கோரி நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
 
இந்த சந்திப்புக்கு முன் எடப்பாடி பழனிச்சாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.