1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மே 2024 (21:39 IST)

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

போதை மருந்து கடத்தியதாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிலையில் தற்போது அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திரை உலக பிரபலமான ஜாபர் சாதிக் என்பவர் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் டெல்லியில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிடம் ஒரு பக்கம் தீவிரமாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஜாபர் சாதிக்கும் மனைவி ஹமீனா என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமிலாகத்துறை அலுவலகத்தில் ஹமீனாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva