திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (12:35 IST)

மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு: மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்பதும் அங்கு அவர் மேகதாது அணை மற்றும் மார்கண்டேய அணை பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் மேகதாது அணை, மார்க்கண்டேய அணை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
மேலும் மேகதாது அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தும்படி மத்திய அமைச்சர் ஷெகாத்திடம் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு வர வேண்டிய நீரை சரியாக தருவதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சருடனான தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கலின் இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன