வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (11:12 IST)

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்டு ஷாக் கொடுத்த ரசிகர்கள்!

அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டுக்காக தவமாய் தவமிருந்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் இப்போது ஒரு படி மேலே போய் திருவிழா ஒன்றில் சாமிவந்து ஆடும் நபரிடம் ‘வலிமை அப்டேட் இருந்தா சொல்லுங்க’ எனக் கேட்டு ஷாக் கொடுத்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.