அசிங்கப்படுத்திய துரைமுருகன்: கேட்டும் கேளாமல் கடந்து போன முக்கிய எம்பி-க்கள்!
திமுக பொருளாளர் துரைமுருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவலவனை விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுட்தியுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு, சட்டசபை, பொதுக்குழு என எங்கு சென்றாலு எப்போதும் தனது நக்கலான பேச்சால் கவர்பவர். சில சமயம் இவரது நக்கல் பேச்சு காயப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது.
துரைமுருகன் சமீபத்தில், நம்ம கட்சி தலைவர் ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லம் இன்றைக்கு நமது தயவால் எம்பி ஆகியுள்ளனர். இதற்கு ஸ்டாலினின் சாமர்த்தியம் தான் காரணம் என திமுக உடன் பிறப்புகளுக்கு மத்தியில் பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆம், துரைமுருகன் வைகோவையும், திருமாவலவனையும் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக மதிமுகவினரும், விசிகவினரும் அதிருப்தியில் உள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால், இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என தலைமை கூறிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.