ரஜினி ”ரீல்” தலைவர்;எடப்பாடி ”ரியல்” தலைவர்..அதிமுக நாளேட்டில் பதிலடி

Arun Prasath| Last Modified செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:31 IST)
முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி ஒரு ரியல் தலைவர் என ரஜினியை குறிப்பிட்டு நமது அம்மா நாளிதழில் பதிலடி வந்துள்ளது.

ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியபோது, அதற்கு பதிலடியாக “ரஜினி என்ன தலைவரா? அவர் வெறும் நடிகர்” தான் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

இந்நிலையில் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் ”கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ஆவார் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் எனவும், முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி ஒரு ரியல் தலைவர் எனவும் ரஜினியை குறிப்பிட்டு பதிலடி தரப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :