திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (19:08 IST)

ரஜினி ஆன்மிகவாதி... நாளை எதுவும் நடக்கலாம்... அவர் மீது தவறில்லை - ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசியலை யாராலும் கணிக்க முடியாத நிலையில் சென்று கொண்டுள்ளது.ஏகப்பட்ட எதிர்பார்புகள் அன்றாடம் பிரேக்கிங் செய்திகள், அவதானிப்புகள் அற்ற தீடீர் திருப்பங்கள் நிறைந்த முடிவுகள் என எல்லாவற்றுக்குமான  தலைமை மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக்கொண்டுள்ளது.
திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட எதிர்ப்புக் கட்சிகள்,வலதுசாரிகள் என எண்ணற்ற கட்சிகள் தொடர்ந்து இயங்கிவந்தாலும், திராவிடக் கட்சிகளின் ஆளுமையை யாராலும் அசைக்க முடியவில்லை. இந்நிலையில் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதாவது :
 
பாட்ஷா படத்தின் போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் காலம் தாழ்த்திவிட்டார். ரஜினி ஆன்மீகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம்.  என தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் எந்ததவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.