1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 மார்ச் 2019 (13:41 IST)

ரெய்டில் சிக்கிய துரைமுருகன் : ரங்கராஜ் பாண்டே கிண்டல் ’டுவீட் ‘

தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 


 
 

இன்று காலையில்  துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில்  சோதனை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. தற்போது திமுக திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் அதிகாலை 3 மணி முதல்  நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை இன்று காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.
 
இந்நிலையில் இன்று காலை 8:03 தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையின் சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை என்றார்.
 
இந்நிலையில் தற்பொழுது துரைமுருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் முடிவில் இரண்டு பைகளில் ஆவணங்களுடன் , ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்நிலையில் பிரபல சேனலின் முன்னாள் நெறியாளராக இருந்த ரங்கராஜ் பாண்டே தற்போது இந்த சம்பவத்தை குறித்து கிண்டலாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார்.
 
அதில் துரைமுருகன் ; எங்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி மிரட்ட நினைக்கிறது பாஜக என்று அவர்  கூறியதை குறிப்பிட்டும், அதற்குக் கீழே பதிலாக சந்தேக சாம்பிராணி : விஜயபாஸ்கர் வீட்டிலலேயும் , தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடந்தா தக்காளி சட்னி உங்க வீட்டுல ரெய்டு நடந்தா ரத்தமா என்றும் பதிவிட்டு இதைச்  சாணக்கியா குறிப்பிடுவதாக ( அவரது அதிகாரபூர்வ சாணக்கியா பத்திரிக்கை ) குறிப்பிட்டுள்ளார்.