அந்தர்பல்டி அடித்த சுதீஷ்!!! கடுப்பான துரைமுருகன்

வியாழன், 7 மார்ச் 2019 (14:01 IST)
திமுகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என தேமுதிக நிர்வாகிகள் கூறுவது பொய் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே நீடித்து வரும் நிலையில் கடைசியாக 4 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என அதிமுக கூறிவிட்டது. 
 
இந்நிலையில் நேற்று தேமுதிக சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.
 
இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில் ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாக சொன்னார்.
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேச சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார். அதுபோக துரைமுருகன் திமுக பற்றி நிறைய தன்னிடம் புலம்பியதாகவும், அதை பற்றி வெளியே சொன்னால் நன்றாக இருக்காது எனவும் கூறினார்.
 
கேப்டன் வழியில் வந்த நாங்கள் அரசியல் நாகரிகம் கருதி சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லவில்லை ஆனால் துரைமுருகனுக்கோ அந்த நாகரிகமெல்லாம் இல்லை என காட்டமாக பேசினார்.
 
இதற்கு விளக்கமளித்துள்ள துரைமுருகன் நேற்று தேமுதிக நிர்வாகிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் எனவும் ஆனால் தற்போது அவர்கள் மாற்றி பேசுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வெயிலின் கொடுமை: ஏடிஎம் மையத்தை படுக்கையறையாக்கிய நபர்

யாராவது கட்சியை விட்டு போறதா இருந்தா ஜூலை 21க்குள் போயிடுங்க: மம்தா பானர்ஜி

1,600 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மத்திய அரசு அனுமதி.. மாஸ் காட்ட போகும் ரிலையன்ஸ் ஜியோ...

ரெஸ்டோ பார் திட்டம் : அமைச்சர் விக்னேஷ் மறுப்பு!

பழனி கோயில் நிலம் முறைகேடு விவகாரம்: நிலத்தை விற்ற, வாங்கியவர்கள் தலைமறைவு..

அடுத்த கட்டுரையில்
Show comments