Daily Horoscope
✕

எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!.. துரைமுருகனே சொல்லிட்டாரே!..

Updated: திங்கள், 26 அக்டோபர் 2026 (20:43 IST)
நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இருவருமே சமீபத்தில் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சந்திப்பை நடத்தினர். இதில் தனுஷ் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

நேற்று கூட தனுஷ் தனது ரசிகர் மன்ற பெண் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவர்கள் அனைவருக்கும் காமாட்சி விளக்கையும் பரிசளித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இன்று காலை முதலே சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்த திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் ‘ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அத்போல பலரும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது’ என தெரிவித்திருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments