செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:38 IST)

கனமழை எதிரொலி.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் தொடக்கப் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலை மழை பெய்து வருகிறது. சென்னையில் திடீரென காலை ஆறு மணிக்கு பல இடங்களில் கன மழை பெய்து வந்தது என்பதும் இதனால் சாலைகளில் மழை நீர் தயங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதை அடுத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva