செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:48 IST)

கனமழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த  நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், வரும் 132 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம் செங்கல்பட்டு, திருச்சி, கரூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர்,திண்டுக்கல், தேனி, நீலகிரி, வேலூர், விழுப்புரம், கோவை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு கனமழையொட்டி  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தற்போது,24 வது மாவட்டமாக  ராம நாதபுரத்திலும், மழையையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj