செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (07:26 IST)

கனமழை எதிரொலி: 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது 
 
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களுக்கு கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கேரளாவில் இன்றும் கனமழை தொடர்ந்து வருவதை அடுத்து 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva