வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (22:58 IST)

''தங்கலான்'' படத்தின் புதிய அப்டேட்-- விக்ரம் டுவீட்

THANGALAN
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். சவாலான வேடங்களை ஏற்று நடித்து வரும் அவர் பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின்,  இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில்  'தங்கலான்’ படத்தில்  நடித்து வருகிறார்.  இப்படத்தில் பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தனங்கலான் படத்திற்கான படப்பிடிப்பு  மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான இப்பட ஷீட்டிங்கில் ஆர்வமுடன் கலந்துகொண்டு நடித்து வந்த நடிகர் விக்ரம், இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’இப்படத்தில் ஒரு நடிகராக  பல உற்சாகமான அனுபவங்களை பெற்றதாகவும், இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கும் கடைசி நாள் ஷூட்டிற்கும் இடையே 118 நாட்கள் இருந்ததாகவும் இந்தக் கனவை வாழ வைத்த இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு நன்றி ஒவ்வொரு நாளும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில்,  போஸ்ட் புரடெக்சன் பணிகள் 6 மாத காலம் நடைபெறும் என்று தகவல் வெளியாகிறது.

எனவே  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம்  ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.