Daily Horoscope

மாணவனுக்கு லிப்ட் கொடுத்த டிரைவர் - யாருமில்லாத இடத்தில் பாலியல் தொல்லை !

Updated: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (07:53 IST)
பேருந்துக்காக காத்திருந்த மாணவனை லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று டிரைவர் ஒருவர் அவரிடம் அத்துமீறிய சம்பவம் ஆவடியில் நடந்துள்ளது.

ஆவடி அருகே உள்ள வெள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கன்னடபாளையம் எனும் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவனிடம் லிப்ட் தருவதாக சொல்லி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

யாரும் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி அவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் பயந்த அந்த மாணவன் கத்தி கூப்பாடு போட்டுள்ளான். அவனது சத்தத்தைக் கேட்ட மக்கள் அங்கு வந்து மாணவனிடம் என்னவென விசாரித்துள்ளனர். மாணவன் நடந்ததை சொன்னதும் செல்லத்துரையை தர்ம அடிக் கொடுத்து அருகில் உள்ள போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்