வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2019 (21:32 IST)

விளையாட்டு - இசையை ஒருங்கிணைத்த கணித தத்துவ படைப்புகள் ! மாணவ, மாணவிகள் அசத்தல்...

கரூர் சின்னாண்டாங்கோயில் ரோடு பகுதியில் உள்ள சங்கரவித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் கணித காட்சி சிறப்பாக நடைபெற்றது. 

வாழ்வியலில் கணிதம் மிக அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஸ்ரீ சங்கர வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் இந்த கணித கண் காட்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பங்கேற்று கணிதம் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

மேலும், நம் அன்றாட வாழ்வில் ஒன்றன கலந்திருக்கும் விளையாட்டு, இசைகளில் கலந்திருக்கும் கணிதம், அதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, பரமபதம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகளுடன், இசையையும் கொண்டு கணிதத்தின் தத்துவத்தையும் மாணவர்கள் விளக்கி கூறினார்கள்.

இந்த கண்காட்சியில் கரூர் மாவட்ட அளவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கணிதத்தினையும், அதன் தத்துவத்தினையும் எடுத்து கூறும் அளவிற்கு படைப்புகளை எடுத்து விளக்கினர்.