வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (21:04 IST)

திரெளபதி படத்தை விமர்சனம் செய்த வீரமணியை விளாசிய ராமதாஸ்

வீரமணியை விளாசிய ராமதாஸ்
சமீபத்தில் வெளிவந்த திரெளபதி திரைப்படம் குறித்து அரசியல்வாதிகள் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக  எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் இந்த படத்தை ஆதரித்து கருத்து கூறி வருவதோடு, தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
 
அதே நேரத்தில் ஒருசிலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரெளபதி திரைப்படம் ஒரு சாதி வெறி படம் என்று திராவிடர் கழக செயலாளர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். வீரமணியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகின்றது.
 
இந்த நிலையில் கி.வீரமணியின் இந்த கருத்து குறித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: காமாலைக் கண்களுக்கு  காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்
 
தமிழ்நாட்டில் எல்லா சாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி.வீரமணியையே சாரும். அதற்காக அவருக்கு சாதிகளை ஒழித்த சாதனையாளர்(?!) என்ற பட்டத்தைக் கொடுக்கலாம். சாதி ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துகளை சுரண்டி தின்றதை தவிர இவர்கள் செய்த சேவை என்ன? இவ்வாறு கி.வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளாசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது