திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (16:09 IST)

ராம்குமார் ஒரு டவுடூடூடூடூடூ: உன் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயரா?

ராம்குமார் ஒரு டவுடூடூடூடூடூ: உன் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயரா?

சுவாதி கொலைவழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அவர் மின்சார கம்பியை வாயில் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்பட்டது.


 
 
இந்த காரணம் தான் இது தாற்கொலை அல்ல கொலை என பலரும் சந்தேகம் எழுப்ப காரணமாக அமைந்துள்ளது. சிறையில் ஒருவர் மின்சார வயரை கடித்து மரணிப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அவர் மின்சார வயரை கடித்து இறந்திருக்க வாய்ப்பே இல்லை என சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். Kastro Harshith என்பவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த தகவலில் ராம்குமார் ஒரு டவுட்டூடூடூடூடூ என தலைப்பிட்டு அந்த தகவலை கூறியுள்ளார்.


 
 
நானும் ஒரு 15 ஆண்டுக்கு மேலாக மின் மற்றும் மின்னனு துறையில் தொழில் செய்யுறேன். நான் ஒரு 1.5 Mm ஒயரை கொரடு இல்லா நேரத்தில், பல்லால் அதை துண்டிக்க என் பல்லும் வாயும் படும் பாடு சொல்லி மாளாது வலி.
 
சரி சிறையோ புதுசு, எப்புடியும் அடுப்படியில ஒரு 2.5 Or 4.mm டபுள் இன்சுலேட் ஒயர்தான் பயன்படுத்தபட்டு இருக்கும். அதை கடித்து காயபடுத்துவது என்பது குதிரை கொம்பு. அப்புடியே அவன் கடித்திருந்தாலும் புது சிறை என்பதால் MCB. ELCB போன்ற தானியங்கி ட்ரிப்பர் கண்டிப்பாக இருந்திருக்கும். ஷாக் அடித்தவுடன் மின் இணைப்பு துண்டித்திருக்கும், உயிர் சேதம் நிகழ வாய்ப்பில்லை.
 
சரி ஒரு வேளை கிச்சன்ல 180Mm உயர் மின் கேபிள் போட்டுருப்பாங்களோ!! அதை கடிக்க முடியாதே. ராம்குமார் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயாரா? டவுட்டை கிளியர் பன்னுங்க தஅ போலிஸ் சர்கார்.. என அவர் அந்த பதிவை போட்டுள்ளார். அந்த பதிவும் இந்த தற்கொலையில் நம்மை சிந்திக்க வைக்கிறது.