ரஜினிக்கு பாஜக பேக் அப்?? பொடி வைத்து பேசிய முருகன்!

திங்கள், 7 டிசம்பர் 2020 (09:21 IST)
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பாஜக இருக்கிறதா? என சூசகமாக பாதில் அளித்துள்ளார் எல்.முருகன். 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.  
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் தேசிய பற்றாளர். ஆன்மிகவாதி. அவர் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு எங்களது தேசிய தலைமையின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பாஜக இருக்கிறதா? என கேட்கிறீர்கள். இதற்கான பதிலை பொறுத்திருந்து பாருங்கள் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார். 

எல்லாம் காட்டு

தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!.. யாருக்கு என்ன துறை?.. வாங்க பார்ப்போம்!..

பெண் குழந்தைக்கு தந்தை ஆனார் சீமான்!.. நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்து..

தவெக அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். இடம் பெறும்!.. காதர் மொய்தீன் அறிவிப்பு...

ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?.. நெட்டிசன்கள் ஆதங்கம்..

ஒரு வாரத்தில் கட்சியை கலைச்சிட்டு தவெகவில் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி!....

அடுத்த கட்டுரையில்
Show comments