திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (10:11 IST)

கருக்கைலைப்பு செய்ய நடிகையை துன்புறுத்தியது அம்பலம்! – டாக்டர் வாக்குமூலம்!

நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியது டாக்டர் அளித்த வாக்குமூலம் மூலமாக தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமா துணை நடிகை சாந்தினியுடன் வாழ்ந்துவிட்டு அவரை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கின் விசாரணையில் பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. மணிகண்டனால் தான் கர்ப்பமானதாகவும், அதை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் சாந்தினி கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த கோபாலபுரம் டாக்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதன் பேரில் சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்ததாக அந்த டாக்டர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், மேலும் கருக்கலைப்புக்கு சாந்தினி வந்தபோது அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தென் மாவட்டம் ஒன்றில் உள்ள நட்சத்திர விடுதியில் சாந்தினியுடன், மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.