செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (09:42 IST)

பட்டாசு வெடிக்கும் போது செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்னென்ன?

தீபாவளி நெருங்கியுள்ளதால் பட்டாசு வெடிக்கும் போது விபத்துகள் அதிகம் நிகழும் என்பதால் பாதுகாப்பான வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

 
பின்பற்றப்பட வேண்டியவை:
1. திறந்த வெளியில் பட்டாசுகள் வெடித்து, சுற்றிலும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, எந்த எரியக்கூடிய பொருட்களும் இல்லாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
3. நீண்ட மற்றும் தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். சரியான அளவு கொண்ட பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பிரத்தியேக கவனம் செலுத்தி கண்காணிப்பில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. எந்தவிதமான சுவாச பிரச்னைகள் கொண்டவர்கள், வீட்டிற்குள்ளே யே இருக்க வேண்டும்.
6. ஒருவேளை தீ ஏற்பட்டு விட்டால், அதனை அணைக்கும் வகையில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும்.
7. ஒவ்வொரு முறை பட்டாசுகளை கையாண்ட பிறகும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
செய்யக்கூடாதவை என்ன? 
1. பட்டாசுகளை கைகளில் வைத்து கொளுத்தக்கூடாது, மெழுவர்த்தி மற்றும் தீக்குச்சி பயன்படுத்தக்கூடாது
2. மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகளை வைக்கக்கூடாது
3. பாதி எரிந்த நிலையில் இருக்கும் பட்டாசுகளை ஒருபோதும் வீச வேண்டாம். 
4. பட்டாசு வெடிக்கும் போது சில்க் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை பயன்படுத்தக்கூடாது.
5. வாகனங்களுக்கு அருகில் வைத்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பட்டாசு வெடிக்கும் போது சானிடைசர் பயன்படுத் கூடாது, அருகில் சானிடைசரை வைத்திக்கவும் கூடாது.