வழக்கம் போல வெளிநடப்பு செய்த திமுகவினர்!!
பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக.
வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தற்போது 3 மாத கால செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனிடையே, பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.