வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:14 IST)

துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தொகுதி எது? பரபரப்பு தகவல்

துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தொகுதி எது? பரபரப்பு தகவல்
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தொகுதி எது?
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 
 
குறிப்பாக அதிமுகவில் விருப்ப மனு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் தங்களுடைய விருப்ப மனுக்களை விண்ணப்பம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்த தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிட பலர் விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் அதிமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற ஒரே எம்பி அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பரமக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன