டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும். திமுக.. தேதி அறிவிப்பு..!
டெல்லியில் திமுகவின் மாணவர் அணி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் தமிழ்நாட்டின் மாநில உரிமையை காப்பாற்ற, "யுஜிசி வரைவு அறிக்கை 2025" திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்றும், திமுக தலைமை அறிவித்துள்ளது. மாநில உரிமைகளை காப்பாற்ற நாம் அனைவரும் இந்த மாநாட்டிற்கு அணி திரள வேண்டும் என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எல். எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் யுஜிசி சில விதிமுறைகளை அறிவித்தது. அந்த விதிமுறைகள் மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தக்கூடாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran