திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (17:20 IST)

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

திமுகவின் சென்னை வடக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் 2021 தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து சென்னை வடக்கு மாவட்டத்தை வடக்கு மற்றும் வடகிழக்கு என இரண்டாக பிரித்துள்ளார். மேலும் அதற்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இளையஅருணாவும், வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மாதவரம் எஸ்.சுதர்சனம்  ஆகியோரை நியமித்துள்ளார்.