புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (16:06 IST)

டுவிட்டரில் டிரெண்ட் ஆகிய #தொடைநடுங்கி_திமுக ஹேஷ்டேக்: என்ன காரணம்?

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று கோவை சென்றிருந்த போது #கோபேக்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் #தொடைநடுங்கி_திமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகிய இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் டுவிட்டரில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் வானதி எம்.எல்.ஏ கேட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்ல முடியாமல் அவரை டுவிட்டரில் பிளாக் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்தே #தொடைநடுங்கி_திமுக என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் இன்றும் திமுகவுக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.