புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக தயார்: அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன 
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் திமுக இலவசமாக உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக தயாராக இருப்பதாக அதிமுக எம்எல்ஏ தங்கமணி தெரிவித்துள்ளார் 
 
திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது குறித்து அங்குள்ள ஆணையரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆனால் அவர் அலட்சியமாக தனது இணைப்பை துண்டித்து விட்டார் என்றும் இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
முதல்வர் கூறியதுபடி அரசுடன் இணைந்து பணியாற்ற அதிமுக தயாராக இருப்பதாகவும் அதிமுக சார்பில் தற்போது குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு அனுமதி அளித்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு நாமக்கல் மாவட்ட அதிமுக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.