1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (15:47 IST)

கொரொனாவை விட ஆபத்தானது இது !

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் கொரொனாவை விட அதிகளவு ஆபத்தான ஒன்றாக மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சிகரெட்டைக் குறிப்படுகிறார்கள்.

இன்று டொபோக்கோ தினம் என்பதால்… புகையிலைப் பயனடுத்துவோர்களும் முன்னாள் இதைப் பயன்படுத்தி வந்தோரும் சமூக வலைதளங்களில் இதுகுறித்துத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் பாதிப்படைகிறார்கள் என்றும்,  இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், தகவல் வெளியாகிறது.

அதேநேரம் கொரொனா பெருந்தொற்றைக் காட்டிலும் சிகரெட் அதிக ஆபத்தானது என்ற புதிய உண்மை வெளியாகியுள்ளது.