1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:13 IST)

திமுக எம்.எல்.ஏ திடீர் பதவிநீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை!

திமுக எம்.எல்.ஏ திடீர் பதவிநீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை!
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபி சங்கர் திடீரென கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதன் காரணமாக திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபி சங்கர் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பதவி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருவெற்றியூர் திமுக எம்எல்ஏ மீது கடந்த சில நாட்களாக வந்த புகாரின் அடிப்படையில் திமுக பொதுச்செயலாளர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன