1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (17:35 IST)

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி சோமுஅவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன