Daily Horoscope

எந்தனை காலம் பல்லக்கில் தூக்குவது? திமுக - காங்கிரஸ் பிளவா??

Updated: சனி, 22 ஜூன் 2019 (13:15 IST)
காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? என திமுகவின் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குடிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டி திமுக சார்பில் போராட்டம் நடக்கும் என கூறியது போல மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 
அப்படி திருச்சியில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது, திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது?
 
மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கூட்டணி சேர்க்காமல் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும் என்றார். அவரின் இந்த பேச்சு திமுக - காங்கிரஸ் இணக்கத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments